உணவுகள்

cool
         
       
     
      DISK SPACE IN VISTAThursday, December 16, 2010 14:45INCREASE YOUR DISK SPACE IN VISTA
One thing that Microsoft has improved upon over the other Windows releases are Vista's backup features
that are incorporated in to System Restore.
The backup features are turned on by default so with all of the automatic backing up Vista does, it won't take long to lose quite a bit of disk space.
It may not be a bad idea to go in and delete the old backup files and restore points to increase your available disk space.

this task is very simple one.

steps to do it:

> Go to Start
> In the Instant Search text box, type: disk cleanup
> Open the disk cleanup tool and select the option titled: Files from all users on this computer
> Select the drive that you would like to cleanup.
> Select the "More Options" tab.
> Click the option titled: Clean Up under System Restore and Shadow Copies
> In the confirmation screen, click "Delete".உணவுகள்Thursday, November 25, 2010 16:34உடற்சூட்டை தணிப்பவை



பச்சைப்பயிறு, மோர், உளுந்தவடை, பனங்கற்கண்டு, வெங்காயம், சுரைக்காய், நெல்லிக்காய், வெந்தயக்கீரை, மாதுளம் பழம் நாவற்பழம், கோவைக்காய், இளநீர்

ருசியின்மையைப் போக்குபவை

புதினா, மல்லி, கறிவேப்பிலை, நெல்லிக்காய், எலுமிச்சை, மாவடு, திராட்சை, வெல்லம், கருப்பட்டி, மிளகு, நெற்பொறி



சிவப்பணு உற்பத்திக்கு



புடலைங்காய், பீட்ரூட், முருங்கைக்கீரை, அவரை, பச்சைநிறக் காய்கள், உளுந்து, துவரை, கம்பு, சோளம் கேழ்வரகு,பசலைக்கீரை



மருந்தை முறிக்கும் உணவுகள்



அகத்தி, பாகற்காய், வேப்பிலை, நெய், கடலைப்பருப்பு, கொத்தவரை, எருமைப்பால் . சோம்பு, வெள்ளரிக்காய்



விஷத்தை நீக்கும் உணவுகள்



வெங்காயம், பூண்டு, சிறுகீரை, வேப்பிலை, மிளகு, மஞ்சள்,



காயம் பித்தம் தணிப்பவை



சீரகம், கருப்பட்டி, வெல்லம், சுண்டைவற்றல் செவ்விளநீர், அரைக்கீரை, எலுமிச்சைஅஞ்சல் குறியீட்டு எண்Tuesday, November 16, 2010 21:14நாடுகளின் அஞ்சல் குறியீட்டு எண்

இந்தியாவில் மட்டுமல்ல உலகத்தின் அனைத்து நாடுகளின் அஞ்சல் குறியீட்டு எண்ணை வைத்து எந்த நாடு என்பதையும் தெருவின் பெயரையும் எளிதாக கண்டுபிடிக்கலாம். நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது.
http://www.addressdoctor.com/lookup/default.aspx?lang=en

இந்த முகவரியைச் சொடுக்கி இந்தத்தளத்திற்கு சென்று எந்த நாடு என்பது தெரிந்திருந்தால் நாட்டை தேர்ந்தெடுக்கவும் தெரியாவிட்டால் நாடு என்பதில் Worldwide எனபதை தேர்ந்தெடுத்துக்கொள்ளவும். அடுத்து Postal code என்பதில் பின்கோட் (அஞ்சல் குறியீட்டு எண்) கொடுத்து Search என்ற பொத்தானை அழுத்தவும். உடனடியாக சில நொடிகளில் நமக்கு எந்த ஊர் என்று காட்டுகிறது. வரும் முடிவின் வலது பக்கம் இருக்கும் Select  என்பதை சொடுக்கி மாவட்டம், தாலுகா, தெரு வாரியாக பார்க்கலாம். கண்டிப்பாக இந்தத் தகவல் நமக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். உதாரணமாக நாம் இந்தியாவில் இருக்கும் நம் கிராமத்தின் பின்கோடு முகவரி கொடுத்து தேடினோம் முடிவு மிகச்சரியாக இருந்தது படத்தில் காட்டப்பட்டுள்ளது.வேலைவாய்ப்புTuesday, November 16, 2010 21:12ஆன்லைனில் வேலைவாய்ப்பு பதிவு

இணைய தளத்தில்  தங்களது பதிவு எண்ணை உள்ளிட்டு தங்களது கல்வி விவரங்களை சரிபார்த்துக்  கொள்ள முடியும். புதிதாக பதிவு செய்து கொள்ள விரும்புவோர்  தங்களது கல்வித் தகுதி, பிறப்பு, ஜாதிச் சான்றிதழ்களை ஸ்கேன் செய்து இந்த  இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்இணையதள முகவரி: www.tnvelaivaaippu.gov.in
ஆன்லைனில் பதிவு செய்யும் முறை
1 ஆன்லைனில் பதிவு செய்வது எப்படி ?இணையதளத்திலுள்ள  படிவத்தில் விவரங்களை நிரப்பி சான்றிதழ்களை ஸ்கேன் செய்து படிவத்தில்  விண்ணப்பித்தவுடன் ஒரு தற்காலிக பயனாளி அடையாளம் மற்றும் ஏற்புச்சொல்  வரும். தங்கள் விண்ணப்பத்தின் விவரங்கள் சரியானவை எனில் 7 நாட்களுக்குள்  விண்ணப்பம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஏற்கப்படும். பதிவு அடையாள அட்டையே  தாங்களே உருவாக்கி, தாங்களே அச்சிட்டு வெளியே எடுத்துக் கொள்ளலாம்.
2 கூடுதல் பதிவு செய்வது எப்படி ?ஆன்லைன்  கூடுதல் தகுதிகள் பகுதியை கிளிக் செய்ய வேண்டும். தங்கள் கோரிக்கையை  வேலைவாய்ப்பு அலுவலகம் ஏற்றபின் புதிய அடையாள அட்டையை எடுக்கலாம்.
3 ஆன்லைனில் புதுப்பிக்க இயலுமா?ஆம்.  ஆன்லைனில் புதுப்பிக்கலாம். மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை பதிவான  மாதத்திலும் தொடர்ந்து வரும் இரு மாதங்களுக்குள்ளும் புதுப்பிக்கலாம்.  வரையறுக்கப்பட்டுள்ள காலத்தே புதுப்பிக்காதவர்கள் 18 மாதச் சலுகையில்  புதுப்பிக்க விண்ணப்பிக்கலாம்.

4 விண்ணப்பம் ஏற்கப்பட்டதா, மறுக்கப்பட்டதா? என்பதை எப்படி அறிவது?தற்காலிகப்  பதிவு எண்ணை “பயன்படுத்துவோர் அடையாளமாகவும்” (username), பிறந்த தேதியை,  எற்புச் சொல்லாகவும்(password) பயன்படுத்தி, பதிவின் நிலையை அறியலாம்.
5 ஆன்லைனில் முகவரி மாற்ற முடியுமா?ஆம். பதிவு செய்தவர்கள் தாங்களே முகவரியை மாற்றிக் கொள்ளலாம்.
6 ஆன்லைனில் முன்னுரிமைச் சான்றினை(priority certificate) பதிய இயலுமா?முன்னுரிமைச்  சான்றுகள், எடுத்துக்காட்டாக, நில எடுப்பு பாதிப்புச்சான்று (land  acquisition) போன்றவற்றில் மெய்த்தன்மை உறுதி செய்யப்படவேண்டும். எனவே,  எவ்வகை முன்னுரிமைச் சான்றுகளையும் ஆன்லைனில் பதிய இயலாது. சான்றின்  நகல்களை விண்ணப்பத்துடன் அஞ்சலில்/நேரில் வேலைவாய்ப்பகத்திற்கு அனுப்ப  வேண்டும்.
7. இத்தளத்தில் பதிவு செய்ய தகுதியானவர் யார்?இத்தளத்தில் தமிழ்நாட்டில் வசித்து வருபவர் பதியலாம்.
8. இத்தளம் மூலம் பணி நாடுவோர்களுக்கு உள்ள வசதிகள் யாவை?நேரில்  பதிவு, நேரில் பதிவு புதுப்பித்தல், தகுதிகள் அதிகப்படுத்தல்,  அனுப்பப்பட்ட பதிவுக்கான பதிவட்டை எடுத்தல், வேலைவாய்ப்பு விவரங்கள்,  பல்வேறு தகுதிகளுக்கான பரிந்துரை வரம்புகள் அளித்தல் ஆகியவை உள்ளன.அம்மாSunday, November 14, 2010 11:35அம்மா என்பது தமிழ்
வார்த்தை
அதுதான் குழந்தையின் முதல்
வார்த்தை
அம்மா இல்லாத
குழந்தைகட்கும்
ஆண்டவன் வழங்கும் அருள்
வார்த்தை!

கவலையில் வருவதும் அம்மா
அம்மா!
கருணையில் வருவதும் அம்மா
அம்மா!
தவறு செய்தாலும்
மன்னிப்புக்காக
தருமத்தை அழைப்பதும் அம்மா
அம்மா!.....

பூமியின் பெயரும் அம்மா
அம்மா!
புண்ணிய நதியும் அம்மா
அம்மா!
தாய்மொழி யென்றும்
தாயகமென்றும்
தாரணி அழைப்பதும் அம்மா
அம்மா!.....பெரிய நட்சத்திரம்Wednesday, November 03, 2010 21:52சூரியனை போல இருமடங்கு பெரிய நட்சத்திரம்
லண்டன்: சூரியனை போன்று இருமடங்கு பெரிய நியூட்ரான் (மின் இயக்கமற்ற) நட்சத்திரம் வான்வெளி கோளப்பாதையில் கண்டறியப்பட்டுள்ளது.




இதுகுறித்து இங்கிலாந்து நாட்டின் தேசிய கதிரியக்க வான்கோள்கள் கண்காணிப்பு துறையின் விஞ்ஞானி பால் டெமோரெஸ்ட் கூறியதாவது:




சூரியனை போன்று இருமடங்கு பெரிய நியூட்ரான் நட்சத்திரம் கண்டறியப்பட்டுள்ளது. இது ஆச்சரியமாக உள்ளது. உயர் அடர்த்தி மற்றும் அணு இயற்பியல் தொடர்பான எங்களுடைய  பல்வேறு விதிகளுக்கு பல்வேறு அர்த்தங்களை இந்த நட்சத்திர கண்டுபிடிப்பு அளித்துள்ளது. அணுக் கருவை விட, நியூட்ரான் நட்சத்திரம் பல மடங்கு அடர்த்தியானது.



இந்த நட்சத்திரத் தின் மூலப்பொருள் மட்டும் 5000 டன்னுக்கும் அதிகமான எடை கொண்டதாக இருக்கும். இது விண்வெளிக் கோளத்தில் சுற்றி வரும்போது இதிலிருந்து வெளிப்படும் கதிர்வீச்சுக்கள்  விண்வெளியில் படும். இந்த கண்டுபிடிப்பு நியூட்ரான் நட்சத்திரங்கள் தொடர்பான ஆராய்ச்சியாளர்களின் விண்வெளி ஆராய்ச்சிக்கு புதிய வடிவத்தை கொடுத்துள்ளது என்றார்.ஹரிவராசனம்Sunday, October 31, 2010 15:23பாடல்: ஹரிவராஸனம்
பாடியவர்: K.J.ஏசுதாஸ்

ஹரிவராஸனம் விஷ்வமோஹனம்
ஹரிததீஷ்வரம் ஆராத்யபாதுகம்
அறிவிமர்த்தனம் நித்யநர்த்தனம்
ஹரிஹராத்மஜம் தேவமாஷ்ரயே
சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா
சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா
சரணகீர்த்தனம் பக்தமானஸம்
பரணலோலுபம் நர்த்தனாலஸம்
அருணபாசுரம் பூதநாயகம்
ஹரிஹராத்மஜம் தேவமாஷ்ரயே
சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா
சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா
ப்ரணயசத்யகம் ப்ராணநாயகம்
ப்ரணதகல்பகம் சுப்ரபாஞ்சிதம்
ப்ரணவமந்திரம் கீர்த்தனப்ரியம்
ஹரிஹராத்மஜம் தேவமாஷ்ரயே
சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா
சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா
துரகவாஹனம் சுந்தரானனம்
வரகதாயுதம் வேதவர்னிதம்
குருக்ருபாகரம் கீர்த்தனப்ரியம்
ஹரிஹராத்மஜம் தேவமாஷ்ரயே
சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா
சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா
த்ரிபுவனார்ச்சிதம் தேவதாத்மகம்
த்ரினயனம்ப்ரபும் திவ்யதேசிகம்
த்ரிதசபூஜிதம் சிந்திதப்ரதம்
ஹரிஹராத்மஜம் தேவமாஷ்ரயே
சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா
சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா
பவபயாபஹம் பாவுகாவஹம்
புவனமோஹனம் பூதிபூஷனம்
தவளவாஹனம் திவ்யவாரணம்
ஹரிஹராத்மஜம் தேவமாஷ்ரயே
சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா
சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா
களம்ருதுஷ்மிதம் சுந்தரானனம்
கலபகோமளம் காத்ரமோஹனம்
கலபகேசரி வாஜிவாஹனம்
ஹரிஹராத்மஜம் தேவமாஷ்ரயே
சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா
சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா
ஷ்ருதஜனப்ரியம் சிந்திதப்ரதம்
ஷ்ருதிவிபூஷனம் சாதுஜீவனம்
ஷ்ருதிமனோஹரம் கீதலாலஸம்
ஹரிஹராத்மஜம் தேவமாஷ்ரயே
சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா
சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா
சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா
சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா

பஞ்சாத்ரீஷ்வரி மங்களம்
ஹரிஹரப்ரேமாக்ருதே மங்களம்
பிஞ்சாலங்க்ருத மங்களம்
ப்ரணமதாம் சிந்தாமணீ மங்களம்
பஞ்சாஸ்யத்வஜ மங்களம்
த்ருஜகாதாமாத்ய பிரபோ மங்களம்
பஞ்சாஸ்த்ரோபம மங்களம்
ஷ்ருதிசிரோலங்கார சன் மங்களம்
ஓம் ஓம் ஓம்முருகாSunday, October 31, 2010 15:22அழகென்ற சொல்லுக்கு முருகா
பாடல்: அழகென்ற சொல்லுக்கு முருகா
பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன் திரு.டி.எம்.சௌந்திரராஜன்

முருகா! முருகா!

அழகென்ற சொல்லுக்கு முருகா
உந்தன் அருளன்றி உலகிலே பொருளேது முருகா

அழகென்ற சொல்லுக்கு முருகா
உந்தன் அருளன்றி உலகிலே பொருளேது முருகா

அழகென்ற சொல்லுக்கு முருகா

சுடராக வந்த வேல் முருகா கொடும்
சூரரை போரிலே வென்ற வேல் முருகா

சுடராக வந்த வேல் முருகா கொடும்
சூரரை போரிலே வென்ற வேல் முருகா

கனிக்காக மனம் நொந்த முருகா
கனிக்காக மனம் நொந்த முருகா
முக்கனியான தமிழ் தந்த செல்வமே முருகா

அழகென்ற சொல்லுக்கு முருகா

ஆண்டியாய் நின்ற வேல் முருகா
உன்னை அண்டினோர் இன்பமே முருகா

ஆண்டியாய் நின்ற வேல் முருகா
உன்னை அண்டினோர் இன்பமே முருகா

பழம் நீ அப்பனே முருகா
பழம் நீ அப்பனே முருகா
ஞானப்பழம் நீ அல்லாது பழமேது முருகா

அழகென்ற சொல்லுக்கு முருகா
உந்தன் அருளன்றி உலகிலே பொருளேது முருகா

அழகென்ற சொல்லுக்கு முருகா

குன்றாறும் குடிகொண்ட முருகா
பக்தர் குறை நீக்கும் வள்ளல் நீ அல்லவோ முருகா

குன்றாறும் குடிகொண்ட முருகா
பக்தர் குறை நீக்கும் வள்ளல் நீ அல்லவோ முருகா

சக்தி உமை பாலனே முருகா
சக்தி உமை பாலனே முருகா
மனித சக்திக்கு எட்டாத தத்துவமே முருகா

அழகென்ற சொல்லுக்கு முருகா

அன்பிற்கு எல்லையோ முருகா
உந்தன் அருளுக்கு எல்லைதான் இல்லையே முருகா

அன்பிற்கு எல்லையோ முருகா
உந்தன் அருளுக்கு எல்லைதான் இல்லையே முருகா

கண்கண்ட தெய்வமே முருகா
கண்கண்ட தெய்வமே முருகா
எந்தன் கலியுக வரதனே அருள் தாரும் முருகா

அழகென்ற சொல்லுக்கு முருகா

ப்ரணவப்பொருள் கண்ட திரு முருகா
பரம்பொருளுக்கு குருவான தேசிகா முருகா

ப்ரணவப்பொருள் கண்ட திரு முருகா
பரம்பொருளுக்கு குருவான தேசிகா முருகா

அரகரா சண்முகா முருகா
அரகரா சண்முகா முருகா
என்று பாடுவோர் என்னத்தில் ஆடுவாய் முருகா

அழகென்ற சொல்லுக்கு முருகா
உந்தன் அருளன்றி உலகிலே பொருளேது முருகா

அழகென்ற சொல்லுக்கு முருகா

முருகா முருகா முருகாநிலவேSunday, October 31, 2010 15:08அமுதை பொழியும் நிலவே


அமுதை பொழியும் நிலவே
நீ அருகில் வராததேனோ
அருகில் வராததேனோ?
அருகில் வராததேனோ?

அமுதை பொழியும் நிலவே
நீ அருகில் வராததேனோ
அருகில் வராததேனோ?

அமுதை பொழியும் நிலவே
நீ அருகில் வராததேனோ
அருகில் வராததேனோ?

இதயம் மேவிய காதலினாலே
ஏங்கிடும் அல்லியை பாராய்
ஆஆ.....
இதயம் மேவிய காதலினாலே
ஏங்கிடும் அல்லியை பாராய்

புது மலர் வீணே வாடிவிடாமல்
புது மலர் வீணே வாடிவிடாமல்
புன்னகை வீசி ஆறுதல் கூற
அருகில் வராததேனோ?
அருகில் வராததேனோ?

அமுதை பொழியும் நிலவே
நீ அருகில் வராததேனோ
அருகில் வராததேனோ?

மனதில் ஆசையை ஊட்டிய பெண்ணே
மறந்தே ஓடிடலாமா?
ஆஆ.......
மனதில் ஆசையை ஊட்டிய பெண்ணே
மறந்தே ஓடிடலாமா?

இனிமை நினைவும் இளமை வளமும்
இனிமை நினைவும் இளமை வளமும்
கனவாய் கதையாய் முடியும் முன்னே
அருகில் வராததேனோ
அருகில் வராததேனோ

அமுதை பொழியும் நிலவே
நீ அருகில் வராததேனோ
அருகில் வராதாதேனோ?

அமுதை பொழியும் நிலவே
நீ அருகில் வராததேனோ
அருகில் வராதாதேனோ?

அமுதை பொழியும் நிலவே
நீ அருகில் வராததேனோ
அருகில் வராதாதேனோ?

படம் - தங்கமலை ரகசியம்
பாடியவர்: பி சுசீலாமுருகாSaturday, October 30, 2010 17:41உனைப் பாடும் தொழில் இன்றி வேறு இல்லை!
எனை காக்க உனையின்றி யாருமில்லை!
முருகா! முருகா! முருகா! முருகா!

கற்பனையில் வருகின்ற சொற்பதமே - அன்பு
கருணையில் உருவான அற்புதமே!
சிற்பச் சிலையாக நிற்பவனே - வெள்ளைத்
திருநீறில் அருளான விற்பனனே!

முருகா! முருகா! முருகா! முருகா!
(உனைப் பாடும் தொழில் இன்றி)

அமுதம் இருக்கின்ற பொற்குடமே - இயற்கை
அழகு வழிகின்ற எழில் வனமே!
குமுத இதழ் விரிந்த பூச்சரமே - உந்தன்
குறுநகை தமிழுக்கு திருவரமே!

முருகா! முருகா! முருகா! முருகா!
(உனைப் பாடும் தொழில் இன்றி)சத்தியம்Saturday, October 30, 2010 17:30சத்தியம், சிவம், சுந்தரம்! ஆஆஆ....
சரவணன் திருப்புகழ் மந்திரம்! ஆஆஆ....

அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்
அவன் ஆலயத்தில் அன்பு மலர் பூசை வைத்தேன்.
அண்ணல் உறவுக்கென்றே உடல் எடுத்தேன் - அவன்
அருளைப் பெறுவதற்கே உயிர் வளர்த்தேன்!
ஆ ஆ..
(அழகன் முருகனிடம்)


பனி பெய்யும் மாலையிலே, பழமுதிர் சோலையிலே,
கனி கொய்யும் வேளையிலே, கன்னி மனம் கொய்து விட்டான்!
பன்னிரெண்டு கண்ணழகைப் பார்த்திருந்த பெண்ணழகை,
வள்ளல் தான் ஆளவந்தான், பெண்மையை வாழ வைத்தான்!
ஆ ஆ..
(அழகன் முருகனிடம்)


மலை மேல் இருப்பவனோ, மயில் மேல் வருபவனோ!
மெய்யுருக பாடி வந்தால் தன்னைத் தான் தருபவனோ!
அலை மேல் துரும்பானேன், அனல் மேல் மெழுகானேன்,
அய்யன் கை தொட்டவுடன் அழகுக்கு அழகானேன்!
ஆ ஆ..
(அழகன் முருகனிடம்)சிந்தனைSaturday, October 30, 2010 17:29சிந்தனை செய் மனமே, தினமே
சிந்தனை செய் மனமே!

சிந்தனை செய் மனமே, செய்தால்
தீவினை அகன்றிடுமே!
சிவகாமி மகனை, சண்முகனை
சிந்தனை செய் மனமே!

செந்தமிழ் தரும் ஞான தேசிகனை,
செந்தில் கந்தனை, வானவர் காவலனை, குகனை
சிந்தனை செய் மனமே!

சந்ததம் மூவாசை சகதியில் உழன்றனை!
சமரச சன்மார்க்க நெறிதனை மறந்தனை!
அந்தகன் வரும்போது அவனியில் யார் துணை?
ஆதலினால் இன்றே...

அருமறை பரவிய
சரவண பவ குகனை
சிந்தனை செய் மனமே!பல வியாதிகளை குணப்படுத்தும் விளாம்பழம்Friday, September 24, 2010 18:17விளாம்பழம் பல வியாதிகளை குணப்படுத்தும் சிறந்த பழமாகும். இதில் இரும்பு சத்தும், சுண்ணாம் புச்சத்தும், வைட்டமின் ஏ சத்தும் உள்ளது. இப்பழத்துடன் வெல்லம் சேர்த்து பிசைந்து 21 நாட்கள் சாப்பிட்டு வந்தால் பித்தம் சம்மந்தமான அனைத்து கோளாறுகளும் குணமாகும்.



பித்தத்தால் தலை வலி, கண்பார்வை மங்கல், காலையில் மஞ்சளாக வாந்தி எடுத்தல், சதா வாயில் கசப்பு, பித்த கிறுகிறுப்பு, கை கால்களில் அதிக வேர்வை, பித்தம் காரணமாக இளநரை, நாவில் ருசி உணர்வு அற்றநிலை இவைகளை விளாம் பழம் குணப் படுத்தும்.



விளாம்பழத்திற்கு ரத்தத்தில் கலக்கும் நோய் அணுக்களை சாகடிக்கும் திறன் உண்டு. எனவே எந்த நோயும் தாக்காமல் பாதுகாக் கும். அஜீரண குறைபாட்டை போக்கி பசியை உண்டுபண்ணும் ஆற்றலும் விளாம்பழத்திற்கு உண்டு. முதியவர்களின் பல் உறுதி இழப்பிற்கு விளாம்பழம் நல்ல மருந்து.செவ்வாழைFriday, September 24, 2010 17:25வாழை மரம், வாழைப்பழம், காய், பூ, இலை மற்றும் தண்டு என அனைத்து பாகங்களிலும் மருத்துவ குணங்கள் இருப்பதாக மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் வியக்கின்றனர். வாழையில் பல வகைகள் இருந்தாலும் மொந்தன் ரகத்தைத்தான் பலரும் சமைத்து சாப்பிடுவது வழக்கம். மொந்தன் வாழைக்காயில் இரும்புச்சத்துடன் நிறைய மாவுச்சத்து காணப்படுகிறது. மெலிந்தவர்கள் இதை அதிகமாக சாப்பிட்டால் உடல் பருக்கும்.



உடலுக்கும் நல்ல வளர்ச்சி ஏற்படும். அதிகபசியாக இருப்பவர்கள் இதை சாப்பிட்டால் உடனேயே பசி அடங்கும். மொந்தன் வாழைக்காடன் மிளகு, சீரகம் சேர்த்து சமைப்பது மிகவும் நல்லது. வாழைக்காயை சமைப்பதற்காக மேல் தோலை அழுத்தி சீவாமல், மெலியதாக சீவினால் போதும். உள்தோலுடன் சமைத்து சாப்பிடுவது நல்லது.



கேரளாவில் சீவி எடுத்த தோலையும் நறுக்கி, வதக்கி, புளி மற்றும் மிளகாய் சேர்த்து துவையலாகச் செய்து உண்பார்கள். இதுவும் உடலுக்கு நல்லது. வாழைக்காயை இப்படி துவையலாக சாப்பிடுவதால் ரத்த விருத்தியும், உடலுக்கு பலமும் அதிகரிக்கும். மேலும் வயிறு எரிச்சல், இருமல் போன்றவைம் நீங்கும். வாழைக்காயை அதிகம் சாப்பிட்டால் வாயுத்தொந்தரவு அதிகமாகும் என்பதால் அளவோடு சாப்பிடுவது நல்லது.



வாழைபிஞ்சுகளை சாப்பிடலாம் என்றாலும் அது மலத்தை இறுக்கி விடும். மேலும் பச்சை வாழைக்காயை சின்னசின்ன துண்டுகளாக நறுக்கி வெயிலில் காயவைத்து மாவாக்கி உப்புடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் அஜீரணம் நீங்கும். வாழை பழத்தில் பல வகைகள் உண்டு. ஒவ்வொன்றுக்கும் ஒரு சிறப்பு பலன் இருக்கிறது. பூவன் வாழைபழத்தை சாப்பிட்டால் மலச்சிக்கலால் உண்டான முலநோய் குறையும்.



ரஸ்தாளி சாப்பிட்டால் பித்த நோய்கள் கட்டுபடும். பேயன் பழம் சாப்பிட்டால் வயிற்று புண்ணை ஆற்றும். நேந்திரன் பழம் ரத்த சோகையை குணமாக்கும். மொந்தன் பழம் சாப்பிட்டால் குளிர்ச்சி கிடைக்கும். மலைவாழையை சாப்பிட்டால் உடல் சூட்டை தணித்து பித்தத்தை போக்கும். செவ்வாழை சாப்பிடுவது ஆண்களுக்கு நல்லது. ஆண்மை பெருகும்.



நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். கருந்துளுவன் வாழைபழத்தில் அதிகளவு அமிலச்சத்து உள்ளது. உடலுக்கு வலு சேர்க்கும். மட்டி ரக வாழைபழத்தில் குழந்தைகளுக்குத் தேவையான சத்துக்கள் அதிகம் உள்ளன. முளையின் நரம்பு வேதியல் கடத்தியான `செரடோனின்’ என்னும் ரசாயன பொருள், வாழைபடும் சாப்பிடுவதால் சுரக்கிறது.



இதனால் தூக்கம் நன்றாக வரும். பிற உணவுகளை நீக்கிவிட்டு தினமும் ஆறு வாழைபழமும், ஆறு டம்ளர் கொழுப்பு நீக்கிய பால் அல்லது மோர் தொடர்ந்து 20 நாட்கள் சாப்பிட்டு வந்தால் உடல் எடையை குறைத்து விடலாம். பத்து நாட்களுக்கு பின்னர், படிபடியாக பாலின் அளவை குறைத்துக் கொண்டு, பச்சைக் காய்கறிகளை சேர்த்துக் கொள்ள வேண்டும். வாழைபழத்தில் உடலின் எடையை அதிகரிக்கும் சோடியம் அதிகமாக இல்லை என்பது குறிபிடத்தக்கது.பீர்க்கங்காய்Friday, September 24, 2010 17:24பீர்க்கங்காய், வெள்ளரிக்காய் குடும்பத்தைச் சேர்ந்தது என்று சொன்னால் பலருக்கு நம்பக் கடினமாக இருக்கும். நீரிழிவு, தோல் நோய், கண் நோய், நாட்பட்ட புண், இரத்த சோகை முதலியவற்றைக் குணப்படுத்துவதில் பீர்க்கங்காய் கை கொடுத்து உதவுகிறது.



பீர்க்கங்காய் முற்றிவிட்டால் கவலை வேண்டாம். முற்ற முற்ற நல்லது. பீர்க்கை முற்றிய பிறகு மருத்துவக் குணங்கள் நிரம்பிய டானிக்காகவும், சத்துணவுப் பொருளாகவும் திகழ்கிறது. நூறு கிராம் பீர்க்கங்காயில் கிடைக்கும் கலோரி 18தான். ஆனால் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச் சத்து, நார்ச்சத்து, மாவுப்பொருள், வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் சி என அனைத்து வகையான வைட்டம¢ன்களும் தாது உப்புக்களும் தக்க அளவில் உள்ளன.



இதனால்தான் டானிக்காகவும், சத்துணவு நிரம்பிய காய்கறியாகவும் இந்த எளிய காய்கறி விளங்குகிறது. நீரிழிவு நோயாளிகள் பாகற்காய்க்கு மாற்றாகவும் இதைச் சேர்த்துக்கொள்ளலாம். இதன் இலை, விதைகள், வேர் என அனைத்தும் மருத்துவக் குணங்கள் நிரம்பியவையே. இதன் இலைகளைச் சாறாக்கி சிறிது நேரம் சூடுபடுத்த வேண்டும். அதில் ஒரு தேக்கரண்டி எடுத்து சாப்பிட்டு வந்தால் நீரிழிவு கட்டுப்படும்.



சொறி, சிரங்கு, நாட்பட்ட புண்கள், காய்ச்சல் ஆகியவை குணமாகப் பீர்க்கங்காய் சாம்பார் வைத்து சேர்த்துக்கொள்ளலாம். மேலும் இதன் இலைகளை அரைத்துப் புண்கள் உள்ள இடங்களில் கட்டினால் போதும். சொறி, சிரங்கு உள்ள இடங்களில் இலைச் சாற்றைத் தடவுதல் நல்லது. இரத்த சோகை நோயாளிகளும், தோல் நோயாளிகளும் இதன் வேரைத் தண்ணீர் விட்டுக் காய்ச்ச வேண்டும். ஆறியதும் நீரை வடி கட்டி அருந்தி வர வேண்டும். இதன் மூலம் இரத்த விருத்தி ஏற்படும்.



பீர்க்கை தோல் நோய்க்கிருமிகளை அழித்துவிடும். கண் பார்வை தெளிவு, நோய் எதிர்ப்புச் சக்தி ஆகியவற்றையும் வழங்கும் பீர்க்கங்காயை அடிக்கடி தேடிப்பிடித்து உண்ண வேண்டும்.கிராம்புMonday, September 13, 2010 18:11மருத்துவ குணங்கள்
கிராம்பில் கார்போ ஹைட்ரேட், ஈரப்பதம், புரதம், வாலடைல் எண்ணெய், கொழுப்பு, நார்ப்பொருள், மினரல், ஹைட்ரோகுளோரிக் அமிலச் சாம்பல்கள், கால்சியம், பாஸ்பரஸ், தயமின், ரிபோ பிளேவின், நயாசின், வைட்டமின் சி மற்றும் ஏ போன்றவை உள்ளன. கிராம்பின் மொட்டு, இலை,தண்டு போன்றவற்றிலிருந்து எண்ணெய் எடுக்கப்படுகிறது.



* கிராம்பில் பலவித மருத்துவ குணங்கள் உள்ளன. இவை பெரும்பாலும் ஊக்கு வித்தல், தூண்டுதல் உண்டாக்கும் பொருளாக உள்ளது. பல வலிகளைப் போக்கு வதுடன் வயிற்றுப் பொருமல், குதவழிக் காற்றேhட்டம் போன்றவற்றுக்கும் மிகச் சிறந்த நிவாரணி.



* உடலைப் பருமடையச் செய்யவும், வளர்ச்சிதை மாற்றப்பணிகளுக்கு உதவவும், சுட்டை சமப்படுத்தவும், ரத்த ஓட்டத்தை முறைப்படுத்தவும் இது பலன் அளிக்கிறது.



* ஜீரண உறுப்புகளில் சுரக்கும் நொதிகளை கிராம்பு ஊக்குவிக்கிறது. இதனால் ஜீரணக்கோளாறுகள் நீங்குகின்றன. * கிராம்புப் பொடியை வறுத்து அரை கிராம் தேனில் குழைத்து சாப்பிட்டால் வாந்தி நிற்கும். கிராம்பில் உள்ள விறைக்கப் பண்ணும் ஒரு பொருள் வயிற்றிலுள்ள சில உறுப்புகளை விரைப்படையச் செய்து வாந்தியைத் தடுக்கிறது.



* நான்கு கிராம் கிராம்பை மூன்று லிட்டர் தண்ணீரில் போட்டு அரை பங்காக சுண்டும் அளவிற்கு கொதிக்க வைத்துப் பருகினால் காலரா குணமடையும்.



* சிறிது சமையல் உப்புடன் கிராம்பை சப்பிச் சாப்பிட்டால் தொண்டை எரிச்சல், கரகரப்பு நீங்கி தொண்டை சரியாகும். தொண்டை அடைப்பால் ஏற்படும் எரிச்சலைத் தவிர்க்க, சுட்ட கிராம்பு மிகச் சிறந்தது.



* கிராம்பு எண்ணெய் மூன்று துளியுடன் தேன் மற்றும் வெள்ளைப் பூண்டுச் சாறு சேர்த்து படுக்கைக்குப் போகும் முன்பு சாப்பிட ஆஸ்துமாவால் ஏற்படும் சுவாசக் குழல் அழற்சி சரியாகும்.



* முப்பது மில்லி நீரில் ஆறு கிராம்புகளைப் போட்டு கொதிக்க வைத்து அந்தக் கசாயத்தில் தேன் கலந்து குடித்தால் ஆஸ்துமா கட்டுப்படும்.



* கிராம்புப் பொடியை பற்பொடியுடன் கலந்து பயன்படுத்தி வர, வாய் நாற்றம், ஈறு வீக்கம், பல்வலி ஆகியவை குணமாகும். கிராம்பு எண்ணெயை பாதிக்கப்பட்ட ஈறுகளில் தடவிவர குணம் கிடைக்கும்.



* 3-5 துளி நல்லெண்ணெயில் ஒரு கிராம்பை சூடு காட்டி அந்த எண்ணெயை வலியுள்ள காதில் இட்டால் சுகம் கிடைக்கும். * தசைப்பிடிப்புள்ள இடத்தில் கிராம்பு எண் ணெயைத் தடவி வர குணம் கிடைக்கும்.



* கிராம்பு மற்றும் உப்பை பசும்பாலில் அரைத்து அந்தப் பசையைத் தடவினால் தலைவலி பறந்துவிடும். தலையிலுள்ள நீரை உப்பு உறிஞ்சி எடுப்பதால் தலைபாரம் குறைந்து குணம் கிடைக்கிறது.



* கண் இமைகளில் ஏற்படக்கூடிய அழற்சிகளை போக்க கிராம்பை நீரில் உரசி அந்த நீரைப் பயன்படுத்தினால் குணம் கிடைக்கும்.



* சமையலுக்கும், கறிகளுக்குச் சுவையூட்டவும், கறி மசாலா வகைகள் தயாரிக்கவும் கிராம்பு முக்கியம். வாசனைத் தயாரிப்பு, சோப்புத் தயாரிப்பிலும் இது பயன்படுகிறது.அற்புத குணங்கள்Monday, September 13, 2010 18:11அத்திப்பழம்

அத்திப்பழம் உணவை விரைவில் ஜீரணிக்கச் செய்து, சுறுசுறுப்பைத்தந்து, கரும் பித்தத்தை வியர்வை மூலம் வெளியாக்கி, ஈரல், நுரை யீரலிலுள்ள தடுப்புகளையும் நீக்குகிறது. அத்திப் பழத்தைத் தின்பதால் வெட்டையின் ஆணிவேர் அற்றுப்போகிறது.



கால் விரல்களில் உண்டாகும் ஒருவித நோயையும் வராமல் தடுக்கிறது. அத்திப்பழம் தின்பதால் வாய்நாற்றம் நீங்குவதுடன் தலைமுடியும் நீளமாக வளர்கிறது



1.தினசரி 2 பழங்களை சாப்பிட்டால் உடலில் இரத்த உற்பத்தி அதிகரிக்கும். உடலும் வளர்ச்சி அடைந்து பருமனடையும்,



2 மலச்சிக்கலை நீக்க உணவிற்குப் பிறகு சிறிதளவு அத்தி விதைகளைச் சாப்பிடலாம்,



3. நாள்பட்ட மலச்சிக்கலை குணமாக்க 5 பழங்களை இரவில் சாப்பிட வேண்டும்.



4. போதைப் பழக்கம் மற்றும் இதர வியாதிகளால் ஏற்படும் கல்லீரல் வீக்கத்தைக் குணமாக்க அத்திப்பழங்களை காடியில் (வினிகர்) ஒருவாரம் வரை ஊற வைக்க வேண்டும். அதன்பின் தினசரி இரண்டு பழங்களை ஒருவேளை சாப் பிடலாம்.



5.தினசரி இரண்டு அத்திப்பழங்களை சாப்பிட்டு வந்தால் உடல் கவர்ச்சி கரமாக வளரும். இதில் முழு அளவு ஊட்டச்சத்து இருக்கின்றது. விஞ்ஞானிகள் அத்தி பழத்தை ஆராய்ச்சி செய்து பார்த்தார்கள். இதில் புரோட்டீன், சர்க்கரை சத்து, கால் ஷீயம், பாஸ்பரஸ் மற்றும் இரும்புச் சத்து அதிக அளவில் இருப்பதாகவும், மற்ற பழங்களைவிட அத்திப்பழத்தில் இந்த சத்துக்கள் நாலு மடங்கு அதிகமாக இருப்பதாகவும் ஆய்வில் கூறியுள்ளனர்.



இதைத் தவிர வைட்டமின் ஏ, வைட்டமின் சி அதிக அளவி லும் இருப்பதாகக் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. பழத்தைப் பொதுவாக உடல் பலவீனத்திலும், ஜுரங்களிலும் பரவலாகப் பயன்படுத்துகிறார்கள். பதப்படுத்தப்பட்ட அத்திப்பழங்கள் யுனானி, நாட்டு மருந்துக் கடைகளில் விற்கப்படுகின்றன. இதை சீமை அத்திப்பழம் என்று கூறுவார்கள சீமை அத்திப்பழம் வெண்குஷ்டத்தை குணமாக்குகிறது.



அரை கிராம் காட்டு அத்திப்பழத்தை தினசரி ஒரு வேளை சாப்பிட்டு வந்தால் வெண்புள்ளிகள், வெண் குஷ்டம், தோலின் நிறமாற்றம் ஆகியவை குணமாகும். அதைப் பவுடராக்கி பன்னீரில் கலந்து வெண் புள்ளிகள் மீது பூசலாம். இதை தயாரிக்க முடியாதவர்கள் யுனானி நாட்டு மருந்துக்கடைகளில் விற்கப்படும் சபூப் பாஸ் என்னும் மருந்தை வாங்கிப் பயன்படுத்தலாம்.தங்கமான   காரட்Monday, September 13, 2010 18:09தாவரத் தங்கம் என்று நாம் அவ்வப்போது உணவில் பயன்படுத்துகின்ற ஒரு பொருளை அழைக்கிறார்கள். அது எந்தப் பொருள் தெரியுமா? காரட் தான் அது. காரட்டிற்கு தாவரத் தங்கம் என்று ஏன் பெயர் வந்தது தெரியுமா? தங்க நகை எப்படி நமது மேனிக்கு பளபளப்பினை தந்து அழகூட்டுகின்றதோ அவ்வாறு காரட்டை நாம் சாப்பிட்டு வந்தால் நமது மேனி பளபளப்பாகும் என்பதனால் தான் காரட்டிற்கு தாவரத் தங்கம் என்று பெயர் வந்தது.



அது மட்டுமல்ல வேறு எந்த காய் கனிக்கும் இல்லாத சிறப்பு குணம் காரட்டிற்கு மட்டுமே உள்ளது. உலகத்தில் இதுவரை மருந்தே கண்டு பிடிக்கப்படாத ஒரு நோய் உண்டென்றால் அது புற்று நோய் (கேன்சர்) தான். அந்த நோய் நமக்கு வராமல் செய்கின்ற ஆற்றல் வேறு எந்த காய் கறிக்கும் கிடையாது. அந்த சிறப்பு குணம் காரட்டிற்கு மட்டுமே உள்ளது. காரட்டில் கரோட்டின் என்கின்ற உயரிய சத்து உள்ளது தான் இதற்கு காரணமாகும்.



இதனை உயர்வாக சொல்வது என்றால் காரட்டில் பீட்டா கரோட்டின் என்கின்ற நமது உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகப்படுத்துகின்ற சத்து உள்ளது என்று சிறப்பித்து விஞ்ஞானிகள் கூறுவார்கள். இந்த பீட்டா கரோட்டினின் உள்ள சிறப்பு அணுக் கூறுகள்தான் புற்று நோய்க்கு எதிரியாக இருந்து செயல்படுகின்றது. இந்த சமயத் தில் உங்களுக்கு ஒரு கேள்வி எழலாம். புற்று நோயை வரவிடாமல் செய்கின்ற ஆற்றல் மட்டும்தான் உள்ளதா?



இல்லை-புற்று நோய் வந்தவர்களுக்கு குணம் அளிக்கின்ற ஆற்றல் காரட்டில் உள்ளதா? என்று நீங்கள் கேட்கலாம். காரட்டில் புற்று நோயை வரவிடாமல் செய்கின்ற நோய் தடுப்பு ஆற்றல் மட்டுமே உள்ளது. காரட்டில் உள்ள பீட்டா கரோட்டின் என்ற சத்து வயிறு தொடர் பான எல்லாவித நோய்கள் அனைத்தையும் குணப்படுத்துகின்ற சக்தி பெற்றவை.



உதாரணமாக பல காலமாக அல்சர் நோய் உள்ளவர்கள், காரம் சாப்பிட்டால் வயிற்று வலி வருபவர்கள் காரட்டினை நன்கு சாறு பிழிந்து வாரத்தில் மூன்று தடவை வீதம் இரண்டு மாதம் சாப்பிட்டால் போதும் வயிறு மற்றும் குடல் சம்மந்தமான நோய்கள் எல்லாம் குணம் அடைவதுடன் மறுபடியும் இதுபோன்ற பாதிப்புகள் வரவிடாமலும் செய்துவிடும் காரட்.



சிலருக்கு வாயில் எப்போதும் துர்நாற்றம் இருந்து கொண்டே இருக் கும் எத்தனை தடவை பல் துலக்கினாலும் அந்த துர்நாற்றம் சிலரு க்கு போகவே போகாது. அதற்கு காரணம் வாயோ, பற்களோ அல்ல. வயிற்றிலிருக்கும் கோளாறுதான் காரணம். எனவே வயிறு குறைபாட்டை ஒழித்தால்தான் அந்த வாய் துர்நாற்றம் போகும். வாய் துர் நாற்றம் உள்ளவர்கள் அத்தனை பேருக்கும் ஒரு இனிப்பான செய்தி இது.



வாரம் ஐந்து நாட்கள் மட்டும் காரட் சாறினை சர்க்கரை மற் றும் உப்பு எதுவுமின்றி அருந்தி வாருங்கள். அப்புறம் பாருங்கள் வாய் துர்நாற்றம் போயே போயிந்து என்று நீங்கள் சொல்வீர்கள். காரட்டினை வாரத்தில் இரண்டு நாட்களாவது நமது சமையலில் பயன்படுத்துவது உடம்பிற்கு நல்லது. ஏனெனில் காரட்டில் நார்ச் சத்து அதிகம் உள்ளதால் மிகுந்த நன்மை தருவதுடன் செரிமானத்தை தூண்டி நல்ல ஜீரண சக்திதியை தருகின்றது.



காரட்டினை பச்சையாகவே நிறைய சாப்பிடலாம். பற்களில் கரை உள்ளவர்கள் அடிக்கடி பச்சையாக காரட்டினை மென்று சாப்பிட்டால் பற்களின் கரைகள் போய்விடும். உங்களுக்கு தாங்க முடியாத பசியா? எதாவது கிடைத்தால் சாப்பிடலாம் என்று தோன்றுகின்றது…



ஆனால் எதுவும் கிடைக்கவில்லை என்கின்ற சூழ்நிலையா? சற்றும் தயங்க வேண்டாம். அருகில் காய்கறி கடை உள்ளதா என்று பாருங்கள். ஒரே ஒரு காரட் வாங்கி பச்சையாக மென்று தின்று பாருங்கள். பசி காணாமல் போய் விடும். காய சண்டிகையின் தீரா பசியைகூட காரட் போக்கி விடும் சக்தி பெற்றது.இயற்கைஉணவோடு இணைந்து வாழ்வோம்Monday, September 13, 2010 18:07மனிதன் இயற்கையை ஒட்டி வாழ்ந்து வந்தால் நோய்கள், பிரச்சினைகள் இல்லாத ஆரோக்கிய ஆனந்த வாழ்க்கையை நிச்சய மாகப் பெற முடியும். ஆனால் நாம் இயற்கைக்கு முரண்பட்டு எத்தனையோ காரியங்களைச் செய்கிறோம். அதுதான் பிரச்சினைகளுக்கு ஆணிவேர்.



நமது உடலில் இரத்தம் தூய்மையாக இருக்க, இயற்கை தரும் உணவு தேன். தினமும் ஒரு டம்ளர் வெது வெதுப்பான நீரில் ஒரு தேக்கரண்டி தேன் கலந்து பருகி வந்தால் ரத்தத்தில் உள்ள குற்றங்கள் நீங்கும். உடல் பருமனைக் குறைக்க வேண்டுமானால் முள்ளங்கி அல்லது கேரட்டைத் துருவி மேலாகச் சிறிது தேன் கலந்து, அருந்தி வந்தால் உடலில் தேவையற்ற கொழுப்பு குறைந்து பருமன் குறையும்.



ஜீரணக் கோளாறுகள் உடையவர்கள் காலையில் வெறும் வயிற்றில் வெது வெதுப்பான நீரில் எலுமிச்சம்பழம் பிழிந்து பருகினால் ஜீரணக் கோளாறுகள் சீரடையும். ரத்தமும் சுத்தம் அடையும். விரல் நகங்கள் சிதைந்து வலிமை அற்றதாய் இருந்தால், சுண்ணாம்புச் சத்துள்ள உணவு வகைகளை உண்ண வேண்டும். பால் இதற்கு மிகவும் சிறந்த பலன்களை அளிக்கும்.



தலைமுடி நன்கு வளர, கீரைகள், கொத்துமல்லி, கறிவேப்பிலை, பால் பொருட்கள், முருங்கைக்காய் முதலிய வற்றை அதிகமாக உணவில் சேர்த்து வந்தால் முடி செழித்து வளரும். கறி வேப்பிலைச் சாறும் தேங்காய் எண்ணெயும் கலந்து நன்கு காய்ச்சி அந்த எண்ணெயை தலைமுடிக்குப் பயன்படுத்தி வந்தால் முடி கருத்து,செழித்து வளரும்.



தக்காளியைப் பச்சையாகப் பச்சடியாகவோ, சாறாகவோ அருந்தி வந்தால், தோலின் நிறம் கூடும். ரோஜா இதழ்களை தேனில் ஊறுவைத்துத் தயாரிக்கப்படும் குல்கந்து உண்டு வந்தால் தோலின் நிறம் கூடி பளபளப்பு பெறும்.



கேரட் கண்பார்வைக்கு நல்லது என்பது அனைவரும் அறிந்ததே இதனை தினமும் பச்சையாக உண்டு வந்தால் கண்பார்வை கூர்மை பெறும். உணவு உண்ணும் நேரங்களில், சிறிது இஞ்சிச் சாறு, எலுமிச்சஞ் சாறு, தேன் இவற்றைக் கலந்து இரண்டு மூன்று தேக்கரண்டி அளவு அருந்தி வந்தால், இரத்தம் தூய்மை அடைந்து, முகப்பருக்கள், மரு,வெண்புள்ளிகள் மறைந்து முகம் தூய்மை பெறும்.



தக்காளி, ஆரஞ்சு சாத்துக்குடி,அன்னாசி ஆகிய பழங்களில் புத்தம் புது சாறுகள் உடல் ஆரோக்கியத் திற்குப் பெரிதும் உதவும்.உடலை குளிர்விக்கும் `பசலை’Monday, September 13, 2010 18:05பசலை ஒரு கொடிவகைத் தாவரம். இந்த கீரையை வீட்டில், தோட்டத்தில் வளர்க்கலாம். ஆறு அங்குல நீளமுள்ள இதன் கொடித்தண்டை நறுக்கி, வேலி ஓரத்தில் அல்லது மரங்களின் அருகில் நட்டு வைத்தால், விரைவில் துளிர்விட்டு கொடியாக வளரும்.



பந்தலிலும் படர விட்டு வளர்க்கலாம். கொடிபசலைக் கீரையின் இலைகளை நன்கு கழுவி சுத்தம் செய்து, பொடியாக அரிந்து சமைத்து சாப்பிடலாம். இலைகளை அவித்து, வெள்ளைபூண்டு, பெருங்காயம், உப்பு சேர்த்து கடைந்து, சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம்.



இதில் புரதம், கொழுப்பு, மாவு பொருட்கள், கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, கரோட்டின், தயாமின், ரைபோபிளாவின், நியாசின், வைட்டமின் சி ஆகிய சத்துக்கள் உள்ளன. இக்கீரை உடல் சூட்டை தணித்து, உடலுக்கு குளிர்ச்சியை உண்டாக்கும்.



கோடை காலத்தில் ஒருநாள் விட்டு ஒருநாள் இக்கீரையை உணவில் சேர்த்துக் கொண்டால், கோடை நோய்கள் நம்மை அண்டாது. ஏதாவது ஒரு வழியில் இக்கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் அஜீரணக் கோளாறுகள் ஏற்படாது. நன்கு பசி உண்டாகும்.



இக்கீரையில் இரும்புச்சத்து இருப்பதால் ரத்த விருத்தி ஏற்படும். இதன் இலைகளை அவித்து, பூண்டு, சீரகம், பெருங்காயம், உப்பு, மிளகு சேர்த்து துவையல் அரைத்து சாப்பிட்டால் குடல் கோளாறுகள் சீராகும். கொஞ்சம் பசலை இலையோடு மாதுளம் பிஞ்சை வைத்து அரைத்து, ஒரு நெல்லிக்காய் அளவு வீதம், முன்று வேளையும் சாப்பிட்டு வர சீதபேதி நன்கு குணமாகும்.



இதன் இலையுடன் மிளகு, மஞ்சள் சேர்த்து அரைத்து வேக வைத்துச் சாப்பிட்டால் தொண்டை கரகரப்பு மாறும், குரல் வளம் பெறும். மேலும் இக்கீரையில் `வைட்டமின் சி’ சத்து உள்ளதால் கண்பார்வை அதிகரிக்கும். இக்கீரையை அடிக்கடி சாப்பிட்டு வர காமம் அதிகரிக்கும். ஆண், பெண் இருவருக்கும் உள்ள சாதாரண மலட்டுத் தன்மையை நீக்கும் ஆற்றலும் கொண்டது. சளித் தொல்லை உள்ளவர்கள் இக்கீரையை தவிர்க்கவும்.பல வியாதிகளை குணப்படுத்தும் விளாம்பழம்Monday, September 13, 2010 18:05விளாம்பழம் பல வியாதிகளை குணப்படுத்தும் சிறந்த பழமாகும். இதில் இரும்பு சத்தும், சுண்ணாம் புச்சத்தும், வைட்டமின் ஏ சத்தும் உள்ளது. இப்பழத்துடன் வெல்லம் சேர்த்து பிசைந்து 21 நாட்கள் சாப்பிட்டு வந்தால் பித்தம் சம்மந்தமான அனைத்து கோளாறுகளும் குணமாகும்.



பித்தத்தால் தலை வலி, கண்பார்வை மங்கல், காலையில் மஞ்சளாக வாந்தி எடுத்தல், சதா வாயில் கசப்பு, பித்த கிறுகிறுப்பு, கை கால்களில் அதிக வேர்வை, பித்தம் காரணமாக இளநரை, நாவில் ருசி உணர்வு அற்றநிலை இவைகளை விளாம் பழம் குணப் படுத்தும்.



விளாம்பழத்திற்கு ரத்தத்தில் கலக்கும் நோய் அணுக்களை சாகடிக்கும் திறன் உண்டு. எனவே எந்த நோயும் தாக்காமல் பாதுகாக் கும். அஜீரண குறைபாட்டை போக்கி பசியை உண்டுபண்ணும் ஆற்றலும் விளாம்பழத்திற்கு உண்டு. முதியவர்களின் பல் உறுதி இழப்பிற்கு விளாம்பழம் நல்ல மருந்து.செல்லமேSunday, July 11, 2010 15:20உன்னைப் பிரிந்தே எந்தன்
உள்ளம் வாடுதே - பிரிவின்
தூரம் அறிந்தும் உன்னைத்
துரத்தித் தேடுதே

செல்லம் நிறை சொற்களாலே
கொஞ்சும் ராசாத்தி - என்னைக்
கனவில் கூடச் சுத்தி வரும்
செல்வச் சீமாட்டி

நட்சத்திரக் கண்கள் எந்தன்
பகலை இரவாக்கும் ‍- அகல‌
நெற்றிநடுக் குங்குமச் சூரியன்
பகலில் நிலவாகும்

காதல் நிறை கண்களாலே
கதைகள் உரைப்பாயே - அதனைக்
கற்றுக்கொண்டு சீண்டயில் அழகு
காட்டிப் பழிப்பாயே

நெடுநாள் பிரிவை உடனே போக்க‌
விடுமுறை நாடுகிறேன்
விடுப்புகள் முடிந்து
வேலைக்கு மீள்கையில்
நோய்நொடி தேடுகிறேன்

புற்கள் நுனிப் பனித்துளி போல
நானும் வருவேனே - எந்தன்
பாசம் கொண்ட ரோசாவே நீ
வாடிப் போகாதே2010 Great SMSFriday, January 15, 2010 19:211. 'Happy Ist Good Morning of 2010 Very Best Wishes to You
Have a jolly and cheerful Morning with whole Year
God Bless you
Gud Morning'

2. have a lucky and wonderfull 2010

'My wishes for you, great start for Jan,
Love for Feb, peace for March,
No worries for April, fun for May,
Joy for June to Nov,happiness for Dec.

Have a lucky and wonderful 2010'


3.*”GØØD”* *”EVENING”*

This is the last Evening of 2ØØ9 last sun set of this year fell every moment of last evening.
~best of luck for~2010'

4. 'Wishing you a fabulous 2010 with full of great achievements and experiences.
A meaningful chapter waiting to be written HAPPY NEW YEAR!'

5. My wishes for you, great start for Jan,
Love for Feb, peace for March,
No worries for April, fun for May,
Joy for June to Nov,happiness for Dec.

Have a lucky and wonderful 2010'Love SMSFriday, January 15, 2010 18:001. Beautiful Line said By Someone In Luv :

"There Is A

Storm In My Heart

&

It Rains From My Eyes


2. I Will Wait ...


Till The Day
"I" Can Forget "You" ...


Or


The Day
You Realize
"You" Cannot Forget "Me" ...


3. L o v e
Is What Make
You Live

n

The Same
L o v e
May Sometimes Makes
you Die ... !!Exam SMSFriday, January 15, 2010 17:571. Knw Wat It Feels Lyk While Xamz?

Tick Tock
Mind Block
Pen Stop
Eyes Up
Tym Shock
Jaw Drop
No Luck
Tym's Up
Oh Fu#K
Xams Suck
Stil Good Luck

2.

Godrej Authorized service

அடோபே டவுன்லோட்